சென்னை: இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி உள்ளது, கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது அதுபோல போதை பழக்கங்களும் அதிகரித்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. தஇது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், கடந்த 12 ஆண்டுகளை விட 2024ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன என்று தமிழக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2023ம் ஆண்டைவிட 2024ல் கொலை, காயம், கலவரம் உள்ளிட்ட குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. 2017-2020 வரை கொலை வழக்குகள் அதிகரித்து 2019ம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின.2021 மற்றும் அதற்கு பிறகு கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
கடந்த 12 ஆண்டுகளை விட 2024ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. 2012ல் மாதத்துக்கு சராசரியாக 161 வழக்குகள் பதிவு, 2021ல் மாதம் 130ஆக குறைந்தன. 2025 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 120 ஆக கொலை குற்றங்கள் குறைந்துள்ளன.
காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 6 ஆண்டில் மிகக் குறைந்த வழக்குகள் 2024ல் பதிவாகின. நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் பெற்றுத் தரப்படுகின்றன.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
“இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…?! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டில் சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…