அஹமதாபாத்
குஜராத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் பணியாற்றும் 130 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர் அஹமதாபாத்தைச் சேர்ந்தவர். அவர் 100 ஆவது பட்டாலியன் பிரிவில் தலைமைக் கான்ஸ்டபிள் மற்றும் ஓட்டுநராக உள்ளார்.
அந்த வீரரிடம் கொரோனா அறிகுறிகள் ஏதும் வெளிப்படவில்லை. கொரோனாத் தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டவுடன் அவருடன் பணியாற்றும் 130 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
3.25 லட்சம் படைவீரர்களைக் கொண்ட எல்லை பாதுகாப்பு படை நாட்டின் மிகப்பெரிய துணைராணுவப் படையாகும்.