நாசிக் :

காராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள சின்னார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கவுரவ், தனது குடும்பத்தாருடன் தங்களின் சோளத்தோட்டத்துக்கு சென்றிருந்தான்.

அவன் மட்டும் தனியாக தோட்டத்தின் உள் பகுதிக்கு சென்று சோளத்தட்டையை பறித்துக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை, சிறுவன் கவுரவ் மீது பாய்ந்து கையை கடித்து இழுத்து சென்றுள்ளது.

இதனால் அலறிய கவுரவ், மற்றொரு கையால் சிறுத்தையின் முகத்தில் ஓங்கி அறைந்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு உறவினர்களும் ஓடி வந்துள்ளனர்.

இதனால் அந்த சிறுத்தை கவுரவை விட்டு விட்டு ஓடிச்சென்று விட்டது. கையில் லேசான காயம் அடைந்த கவுரவ், நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது கையில் தையல்கள் போடப்பட்டுள்ளன..

சிறுத்தையுடன் போராடி உயிருடன் மீண்ட சிறுவன் கவுரவை பற்றித்தான் இப்போது அந்த பகுதியில் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைத்துள்ளனர்.

– பா. பாரதி