ஸ்ரீஹரிகோட்டா:

ஸ்ரோவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 7 செயற்கைக்கோள் திட்டங்கள் உள்பட  13 விண்வெளி திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன்  தெரிவித்துள்ளார்.


பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் நானோ செயற்கை கோள்களும்  தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, இஸ்ரோ தலைவர் சிவன் , ‘கார்டோசாட் -3 இந்தியாவின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட விண்கலம், இது இதுவரை இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டதிலேயே மிகவும் சிக்கலான மற்றும் மேம்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் கார்டோசாட் -3  என்றவர், இது வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

மேலும்,  அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் வரை இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்டு வரும்  வரிசையாக இருப்பதாக கூறியவர், 6 ராக்கெட் திட்டம் மற்றும் ஏழு செயற்கைக்கோள்கள் திட்டம் (பயணங்கள்) என மொத்தம் 13 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவை அடுத்த 4 மாதங்களுக்குள் விண்ணில் ஏவப்படும் என்றும் கூறினார். இஸ்ரோ அணி சவால்களையும் தேவைகளையும் சந்தித்து ஒவ்வொரு பணியையும் பெரிய வெற்றியாக மாற்றும் என்று நம்புகிறோம்’ என்றும் கூறினார்.