டெல்லி: வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களில் 13.74 லட்சம் பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அங்கு சிக்கித்தவித்த இந்தியர்களை தாய்நாடு அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

மே 7-ந்தேதி தொடங்கப்பட்ட விமான சேவையின் மூலமாக இதுவரை 13 லட்சத்து 74 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். எஞ்சிய தாய்நாட்டவரை மீட்கும் நடவடிக்கள் துரிதமாக தொடங்கி உள்ளன.

இப்போது வந்தே பாரத் திட்டத்தின் 6-வது கட்டம் நடைமுறையில் உள்ளது. 1,007 சர்வதேச விமானங்களை இயக்கவும், 2 லட்சம் இந்தியர்களும் இன்னமும் மீட்கப்பட உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.