சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் உச்சம்பெற்றுள்ளது. இந்த நிலையில், வரும் 8ந்தேதி முதல் பிளஸ்2 மாணாக்கர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, ரிவிசன் டெஸ்ட் உள்பட தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு மே மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது. மே 2ந்தேதி வாக்கு எண்
கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு . இந்நிலையில் மே 2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த பணியில் ஏராளமான ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், மே 3ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கினால், அதில் ஆசிரியர்கள் ஈடுபடுவது சிரமத்தை ஏற்படுத்தும். இதனால், ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தில், முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை இன்று நடைபெற்று வருகிறது. மேலும் கொரொனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தேர்வுகளை எப்படி பாதுகாப்புடன் நடத்துவது என்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.