சென்னை: வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் வசதிக்காக, வார விடுமுறை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. அதன்படி, இந்த வாரமும் நாளை முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மாநிலம் முழுவதும் 1200 சிறபு பேரந்துகளை இயக்குகிறது. அதுபோல, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகர்ப்புறங்களுக்கு திரும்பும் வகையிலும் ஞாயிறன்று சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில்
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, வருகிற 10-ந்தேதி (நாளை), 11-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி (நாளை) 425 பஸ்களும், 11-ந்தேதி (சனிக்கிழமை) 505 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி மற்றும் 11-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 985 பயணிகளும், சனிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரத்து 482 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 237 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.