சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், நடைபெற்ற தவெக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சுமார் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. அப்போது , கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு, அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்றது.

தவெகவில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1.கரூரில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்
2.பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்
3.தமிழகம், புதுவை சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் மற்றும் அவர்களின் விடுதலைக்கு அறிவுறுத்தல்
4.வாக்குரிமை பறிக்கும் S.I.R-க்கு கண்டனம்
5.டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம்
6.வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும்
7.ராம் சார் சதுப்புநிலத்தில் கட்டுமான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
8.தலைவரின் மக்கள் சந்திப்புக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை இந்த அரசு வழங்க வேண்டும்
9.கழகத்தின் மேலும் கழகத் தோழர்களின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பும் அரசின் கைக்கூலிகளுக்கு கண்டனம்
10.தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
11.ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
12.கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விரும்பும் முதல்வர் தளபதி விஜய் தலைமையிலேயே போட்டி.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
