ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – நான்காம் மற்றும் இறுதிப் பகுதி
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று நான்காம் மற்றும் இறுதிப் பகுதியில் இறுதியான 3 ராசிகளைப் பார்ப்போம்
மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும்
முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,
இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்திச் செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது.
இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள்.
முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள்.
தன்னை சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்,
ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள்
வாய்ப்புகளுக்காகத் தவம் கிடப்பார்கள்,
கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.
பொறுமை இவர்களுக்கு அதிகம்.
கும்பம்
கும்ப ராசியின் உருவம் பானையைத் தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும்.
பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும்.
இதனால், கும்ப ராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது
அதாவது இவர்கள் எதைச் செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள்.
பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,
யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள்.
மனிதன் பானையைத் தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்குத் தயாராக இருப்பார்கள்.
அதாவது அடிமை வேலை செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.
மீனம்
மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும்.
மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும்.
இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்றுப் புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை,
இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது.
மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,
இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதைப் பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.