ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – இரண்டாம் பகுதி
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று இரண்டாம் பகுதியில் அடுத்த 3 ராசிகளைப் பார்ப்போம்
கடகம்
கடக ராசியின் உருவம் நண்டு ஆகும்.
நண்டு தாய்மையின் அடையாளமாகும்.
அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சுகளைச் சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.
இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்றும்,
தன் குடும்பத்தைக் கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.
நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை,
இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும்.
சிங்கத்திற்குப் பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.
மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை.
இதன் காரணத்தினால், சிம்ம ராசிக்காரர்கள் அவசியம் கருதிச் செயல்படுபவர்கள் எனக் கூறப்படுகிறது.
சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக,எதைப் பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும்.
இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை.
இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,
தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது.
சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்ம ராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும்.
கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாகக் காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.
எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது
கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
அடுத்த மூன்று ராசிகள் குறித்து நாளை பார்ப்போம்…