டில்லி

கார்ப்பரேட் வரிக்குறைப்பால் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக நிதி அமைச்சர்நிர்மலாசீதாரமன் தெரிவித்துள்ளார்.

ந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.   இது மேலும் சரிவை நோக்கிச் செல்வதாகப் பல பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   ஆனால் அரசு தரப்பில் இதை மறுத்து வருகின்றனர்.   ஆயினும் பொருளாதார சரிவை தடுக்க மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் கடந்த செப்டம்பர் குறைத்துள்ளது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளதால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன ஏற்கனவே சீனாவிலிருந்து தங்களின் நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்ற ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவியைச் செய்யச் சிறப்புக் குழுவை ஏற்படுத்தி உள்ளேன் என்று கூறியிருந்தேன்.

தற்போது இந்தியாவுக்கு தங்களின் நிறுவனங்களை இடமாற்றம் செய்ய விரும்புகின்ற 12 சர்வதேச நிறுவனங்களைச் சிறப்புக் குழு ஏற்கெனவே சந்தித்துக் கலந்தாலோசிக்கத் தொடங்கி உள்ளது.    சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் அந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவற்றின் மனநிலை உள்ளிட்டவை குறித்துச் சிறப்புக் குழு ஆய்வு செய்துள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயர ஏதுவாக அவற்றின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.