சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே மோடி அரசுக்கு விருப்பம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
2021ம் ஆண்டுக்குப் பின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை அதற்கான முயற்சியையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை.
இது நாட்டின் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை குறித்த தரவுகளை மறைப்பதற்காகவே வேண்டுமென்று செய்யப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் கரீப் கல்யாண் அன்னா யோஜனா என தற்போது பெயரிடப்பட்டுள்ள திட்டத்தில் 12 கோடி பேருக்கு 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன் மறுக்கப்பட்டுள்ளது என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.