டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 16,561 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 18,053 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 5.44 சதவிகிதமாக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 16,299 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று 16,561 ஆக அதிகரித்தது.
கடந்த 24மணி நேரத்தில் 18,053 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,73,094 ஆனது.
நாடு முழுவதும் தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,25,076 லிருந்து 1,23,535 ஆக குறைந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனா தொற்றால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 பேர் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,47,19,034 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.