சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும்1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 243 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது சென்னையில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 27-ம் தேதி 139 என்ற எண்ணிக்கையில் வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், அரசு அறிவித்துள்ள தளவர்வுகளை மக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்றைய பாதிப்பு  243 ஆக உயர்ந்துள்ளது.

 தமிழகத்தில்  இதுவரை  25,81,094 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  34,395 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 1,917 பேர் குணம் அடைந்துள்ளதுடன், இதுவரை 25,26,317  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சென்னையில் 2,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 33,91,453 பேருக்கும், 11.08.2021 அன்று 14,260 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: