சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்​று, 11-வது சர்​வ​தேச யோகா தினத்தை சிறப்​பாக கொண்​டாட ஆன்​லைன் சேவை தொடங்கப்பட்டிருப்​ப​தாக ஆளுநர் மாளிகை அறி​வித்​துள்​ளது.  இந்த ஆண்டு “ஒரே பூமி, ஒரே ஆரோக்​கி​யத்​துக்​கான யோகா”  என கருப்பொருளின்படி யோகாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில் யோகா பொறிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொடர் முயற்சி காரணமாக, இந்தியாவின் பண்டைய உடல்நலம் சார்ந்த கலாச்சாரமான யோகா உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் சிறப்பாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

யோகா, பண்டைய இந்திய யோகா பயிற்சியின் பின்னணியில் உள்ள தத்துவம், இந்தியாவில் சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களை பாதித்துள்ளது, அது சுகாதாரம் மற்றும் மருத்துவம் அல்லது கல்வி மற்றும் கலைகள் போன்ற துறைகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி. அதிக மன, ஆன்மீக மற்றும் உடல் நல்வாழ்வை அனுமதிக்க மனதை உடல் மற்றும் ஆன்மாவுடன் ஒன்றிணைப்பதன் அடிப்படையில், யோகாவின் மதிப்புகள் சமூகத்தின் நெறிமுறைகளின் முக்கிய பகுதியாக அமைகின்றன. 

இந்திய அரசாங்கத்துடன் இணைந்து WHO , மக்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் ஒரு யோகா செயலியான WHO mYoga-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் யோகா பயிற்சியை கற்பிப்பதற்கும் அதனுடன் இணைவதற்கும் வீடியோக்கள் மற்றும் ஆடியோ கோப்புகளின் தொகுப்பு உள்ளது, மேலும் இது முதல் முறையாக யோகாவை முயற்சிப்பவர்களுக்கும், ஏற்கனவே தொடர்ந்து யோகா பயிற்சி செய்பவர்களுக்கும் பயன்படுத்த எளிதான மற்றும் இலவச கருவியாகும். இந்த செயலியை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியான BeHe@lthy BeMobile உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், நடப்பாண்டு வரும் 21ந்தேதி கொண்டாடப்பட உள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்​பாக, தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்பில், ஆண்​டு​தோறும் ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் கொண்​டாடப்​படு​கிறது. இந்த ஆண்டு 11-வது சர்​வ​தேச யோகா தினத்​தை யொட்டி உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்​றை​யும் ஒன்​றிணைக்​கும் யோகாவை அனை​வரும் பயிற்சி செய்​யு​மாறு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள், “ஒரே பூமி, ஒரே ஆரோக்​கி​யத்​துக்​கான யோகா” என்​ப​தாகும். தனி​நபர் நல்​வாழ்​வுக்​கும், நமது ஆரோக்​கி​யத்​துக்​கும் இடையி​லான முக்​கிய தொடர்பை இது எடுத்​துக் காட்​டு​கிறது. அனை​வரும் தங்​கள் அன்​றாட வாழ்​வில்யோகா செய்து தனிப்​பட்ட ஆரோக்​கி​யத்தை வளர்க்​க​வும், இணக்​க​மான சமூகத்தை உரு​வாக்​க​வும் ஆளுநர் வேண்​டு​ கோள் விடுத்​துள்​ளார்.

இணையவழி சான்றிதழ்: ஆளுநர் மாளி​கை, அண்ணா பல்​கலைக்​கழகத்​துடன் இணைந்து சர்​வ​தேச யோகா தினத்​தையொட்டி நிறு​வனங்​கள், மையங்​கள், அமைப்​பு​கள், நிர்​வாகதுறை​கள், கிராமங்​கள், வேளாண் அறி​வியல் மையங்​கள், விவ​சா​யிகள், மீனவர்​கள், கைவினைக் கலைஞர்​கள் உட்பட அனைத்து தரப்​பினரும் பங்​கேற்​கும் வகை​யில் ஒரு பிரத்​யேக இணை​ய​வழி (https://events.annauniv.edu/) சேவையை தொடங்​கி​யுள்​ளது.

இதில், யோகா பயிற்சி மையங்​களாக பணி​யாற்ற விரும்​பும் மையங்​கள், நிறு​வனங்​கள், அமைப்​பு​கள், துறை​கள் ஆன்​லைனில் பதிவு செய்​துக் கொள்​ளலாம். தனிப்​பட்ட யோகா ஆர்​வலர்​கள் ஆன்​லைனில் பதிவு செய்து சர்​வ​தேச யோகா தின கொண்​டாட்​டங்​களில் பங்​கேற்​கலாம்.  பங்​கேற்​கும் மையங்​களில் ஜூன் 21-ம் தேதி அன்று யோகா பயிற்சி செய்​யும் அனை​வருக்​கும் இணை​ய​வழி சான்​றிதழ் வழங்​கப்​படும்.

ஜூன் 21 யோகா நிகழ்​வுக்​குப் பிறகு, மையங்​கள் தங்​கள் இடங்​களில் நடத்​தப்​பட்ட யோகா செயல் விளக்​கங்​களின் புகைப்​படங்​கள் மற்​றும் ஒளிப்​ப​திவு​களை​யும் சுருக்​க​மான விளக்​கத்​தை​யும் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்​ய​லாம். சிறப்​பாகச் செயல்​படும் மையங்​கள், நிபுணர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டு, ஆளுந​ரால் பாராட்​டப்​படு​வர். கூடு​தல் விவரங்​களுக்கு 70102 57955, 044-22357343, 22351313 ஆகிய எண்​களில் தொடர்​பு​கொள்​ளலாம்​.

இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.