டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: ஏப்ரலில் இருந்து 2.02 கோடி N95 மாஸ்க்குகள் மற்றும் 1.18 கோடி தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவிற்கு 11.78 லட்சம் பிபிஇ கிட்கள், 20.64 லட்சம் மாஸ்க்குகளும், டில்லியில் 7.81 லட்சம் பிபிஇ கிட்கள், 12.76 லட்சம் மாஸ்க்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. 6,154 வென்டிலேட்டர்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 72,293 ஆக்ஸிஜன் படுக்கைகளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டு உள்ளார்.