சென்னை: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு  சென்னையில் இருந்து11,176 சிறப்பு பேருந்துகள் உள்பட 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

தீபாவளியையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளதால். பொதுமக்கள் அதிகம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், தீபாவளி விடுமுறையை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. தீபவாளியை  முன்னிட்டு  சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கம் திட்டமிட்ப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். மாநிலம் முழுவதும் மொத்தம் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  என குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 31ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நவம்பர் 1ந்தேதி (வெள்ளிக்கிழமை)யும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. இதனால் தொடர் விடுமுறை லருவதால், பல லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள்  ரயில்கள் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே ரயில் மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு நிரம்பிய நிலையில், அரசு பேருந்துகளிலும் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக  11,176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து துறைஅறிவித்து உள்ளது.

அதன்படி,  அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. . இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், அக்.31-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்.28 முதல் 30 வரை சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றவர், இந்த வருடம்,   சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் கூறுகையில், 3 நாட்களில் சென்னையில் இருந்து 4,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றவர் சிறப்பு  பேருந்துகள் அனைத்தும்,   கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் பஸ்கள் இயக்கப்படும் என்றதுடன்,  கடந்தாண்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 3 இடங்களில் இருந்து மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றவர், தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு:

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மாதவரம்:

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

அதேபோல, வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வரும் தீபாவளிக்கு 5 லட்சம் மக்கள் அளவிற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல அக்.28 முதல் 30-ஆம் தேதி வரை 11,176 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஏழு முன்பதிவு முனையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என 9 மையங்கள் இயங்கி வருகின்றன.

தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல இதுவரை 1,02,000 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பேருந்துகளில் சென்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார் அளிக்க 24×7 கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். பேருந்து நிலையத்துக்கு வரும் மக்களுக்கு உதவ, பேருந்துகளின் வழித்தடம் குறித்து தகவல்களை அளிக்க பேருந்து நிலையங்களின் முன்புறம் தகவல் மையங்கள் இயங்கும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்.

பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பிற ஊர்களில் 2,910 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

பண்டிகைக்குப் பின் சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அதுபோல பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப 3,165 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.