டில்லி:

லைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பனி காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில், விமான போக்குவரத்துகளும் தாமதமாகி வருகின்றன.

இன்று டில்லியில் ஏற்பட்டுள்ள  கடுமையான பனிமூட்டம் காரணமாக  டில்லி ரயில் நிலையத் திற்கு வரும்  சுமார் 11 ரயில்கள் தாமதமாகி உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகாவ வடமாநிலங்களில் வரலாறு காணாத  குளிர் வாட்டி வரு கிறது.  தலைநகர் டில்லியிலும் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இத்துடன் காற்று மாசுவும் கலந்துள்ளதால், சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தைபோன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இதன் காரணமாக  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கான்புதிரன் குறைவு காரணமாக, ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 11 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. பனி மூட்டத்துடன் காற்று மோசம் அடைந்துள்ளது.