டில்லி
இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு 11 பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இரு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை கேல ரத்னா மற்றும் அர்ஜுனா விருஹ்டுகள் ஆகும். இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
தேசிய விளையாட்டு விருதுகள் குழு மேஜர் தான் சந்த் பெயரில் அளிக்கப்படும் கேல் ரத்னா விருதுக்கு 11 விளையாட்டு வீரர்களுக்கும். அர்ஜுனா விருதுக்கு 35 விளையாட்டு வீரர்களும் பரிந்துரை செய்துள்ளது.
அவர்கள்,
நீரஜ் சோப்ரா (தடகளம்),
ரவி தஹியா (மல்யுத்தம்),
பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி),
லவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை),
சுனில் சேத்ரி (கால்பந்து),
மிதாலி ராஜ் (கிரிக்கெட்),
பிரமோத் பகத் (பேட்மிண்டன்),
சுமித் ஆன்டில் (தடகளம்),
அவனி லேகாரா (ஷூட்டிங்),
கிருஷ்ணா நாகர் (பேட்மிண்டன்)
மணீஷ் நர்வால் (ஷூட்டிங்)
ஆவார்கள்.