தூத்துக்குடி :

ன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். அதில், இப்போதாவது மவுனத்தை கலையுங்கள் மோடி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு  உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலனுக்காக போராடியவர்களை, இப்படி அநியாயமாக சுட்டுக் கொன்றிருப்பது ஜனநாயகத்திற்கே எதிரானது என்று போலீசாருக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சங்க தலைவர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில்  சூடுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதில்” ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அப்பாவி மக்களின் உயிரைப்பறித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள் என்றால், அதில் தூத்துக்குடி மக்களின் நலனை காப்பதற்கான, அவர்களின் ஒற்றுமை தெரிகிறது

இப்போதாவது உங்கள் மெளனத்தை விடுத்து ஒரு முடிவை சொல்லுங்கள் என பிரதமரிடம் ஆவேசமாக அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.

போராட்டம் என்பது ஜனநாயகத்தின் அடையாளம். மக்கள் அதை ஏன் செய்யக்கூடாது? அரசாங்கம் என்பது மக்களுக்கானது.

2019 தயவு செய்து கவனமாக இருங்கள் எனவும் அதில் விஷால் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]