டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும்  மற்றும் வயநாடு மக்களவை தொகுதி உள்பட  இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக   நடைபெற்று வருகிறது.

வயநாடு மக்களை இடைத்தேர்தலில்,  பிரியங்கா காந்தி முன்னிலையில்  உள்ளார்.கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் சிபிஐயின் சத்யன் மொகேரி 30000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

காலை 11 மணி நிலவரப்படி,  மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளதாகவும், ஜார்க்கண்டில்  காங்கிரஸ் கூட்டணியும் பெரும்பான்மை தொகுதிகளில்  முன்னிலையிலும் உள்ளது.

மகாராஷ்டிரா  மாநிலத்தில் 145 இடங்கள் என்ற பெரும்பான்மையை மகாயுதி கடந்துள்ளது.  (பாஜக பாரமதி சட்டசபையின் மகாராஷ்டிர துணை முதல்வர் மற்றும் என்சிபி வேட்பாளர் அஜித்   பவார் 15,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து,

பாஜக 118, சிவசேனா 56, என்சிபி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பற்றள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பான்மையை பெற்றுள்ளது.  ஜேஎம்எம் 24, காங்கிரஸ் 11, ஆர்ஜேடி 6, சிபிஐ(எம்எல்)(எல்) 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  26 இடங்களில் முன்னிலை  பெற்றுள்ளது. பாஜக 24, AJSUP 1, JDU 1 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.