டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 861 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்துள்னர்.  இதன்மூலம்  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்,  புதிதாக 861 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,132 ஆக உயர்ந்தது.

நேற்று புதிதாக 6 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதன் மூலம்,  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,691ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், தொற்று பாதிப்பில் இருந்து மேலும்  929 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,03,383 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,058 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,85,74,18,827 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,44,870 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.