ஐதராபாத்: தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமித்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை நடந்த தேர்வுகளின் மதிப்பெண்களை முழுவதுமாக கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கிரேடு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

கொரோனா காலத்தில் தேர்வை இனி நடத்துவது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதா என மாநில அரசுகள் குழப்பமடைந்துள்ள நிலையில் தெலுங்கானா மாநிலம் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.