சென்னை: 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிடும் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 17ந்தேதி ஹால் டிக்கெட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், கணித பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், தனித்தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) இன்று வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 முதல் மார்ச் 24ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.