சென்னை: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டால், மே மாதத்தில் தேர்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி  விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியவர், பள்ளிகளுக்கு முதல் மற்றும் 3ஆம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது  ஏதும் கூற இயலாது, இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும,  உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர்,  மேலும், 45 வயதிற்கு பேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.