ஹுவாவே நிறுவனம் சீனாவின் முதல் 10G பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா யூனிகாமுடன் இணைந்து, ஹுவாவே நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு சீனாவின் ஹீபே மாகாணத்தில் உள்ள சியோங்கன் நியூ ஏரியாவில் வழங்கப்படுவதாக சீன ஊடக நிறுவனமான MyDrivers ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா இன்னும் 2G-யிலேயே உழன்று கொண்டிருக்க உலகின் அனைத்து ‘தகுடு’ தத்தங்களுக்கும் பெயர்போன சீனா 10G அலைக்கற்றையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இணைப்பின் மூலம் 3 மில்லி செகண்டுகளில் 9834 Mbps வேகத்தில் பதிவிறக்கமும், 1008 Mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்ய முடியும்.
திரைப்படங்கள், கேம்ஸ் உள்ளிட்ட அனைத்து பதிவிறக்கமும் சில வினாடிகளில் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
தவிர, ஒரே இணைய இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களை பயன்படுத்தும் போதும் இதன் வேகத்தில் மாற்றமிருக்காது என்று கூறப்படுகிறது.
சீனாவின் இந்த அதிவேக வளர்ச்சி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து துறைகள் தவிர, கல்வி மற்றும் மருத்துவத் துறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.