மலையாள நடிகர் மற்றும் பாடகருமான பப்புக்குட்டி பாகவதர் இவர் நேற்று இரவு கேரளாவின் கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 107. கடந்த சில வாரங்களாக அவர் வயது தொடர்பான நோயால் அவர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
107 வயது மூத்த நடிகரான் இவர் 25 க்கும் மேற்பட்ட ஹிட் மலையாள படங்களில் ஒரு பகுதியாக இருந்தார். விருத்தன் ஷங்கு, காட்டுகுரங்கு, படிச்ச கள்ளன், விலகுரைஞ்ச மனுஷ்யர் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டில் பாடகராக புகழ் பெற்றார். ‘மேரிக்குண்டோரு குஞ்சாடு’ படத்தில் ’என்டடுகே வன்னடுகம்’ என்ற அவர் பாடிய பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது. வெற்றிகரமான நாடகக் கலைஞராக இருந்த அவர் கேரளாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றினார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகத் தைச் சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் பப்புக்குட்டி பாகவதர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 1913 இல் பிறந்த பப்புக்குட்டி பாகவதர் மைக்கேல் மற்றும் அண்ணா தம்பதியின் 2வது குழந்தை. இவரது மனைவி பேபி 2017 இல் இறந்தார்.