
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கறுப்பு வரலாறு மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவை உருவாக்க அமெரிக்க ஆப்ரிக்கர்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் வகையில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்த வகையில் தெற்கு கரோலினாவில் 1909ம் ஆண்டு பிறந்த கறுப்பர் இனத்தைச் சேர்ந்த விர்ஜினா மெக்லரின் என்ற 106 வயது மூதாட்டி ஒபாமாவை சந்திக்க வேண்டும் என்று 2014ம் ஆண்டில் விண்ணப்பம் அளித்திருந்தார்.
மேலும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஆவலை யூ டியூபிலும் வீடியோ பதிவு மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்த செய்தி லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் இதழில் வெளியாகியிருந்தது.
மூதாட்டியின் விருப்பத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் நிறைவேற்றி வைக்க முடிவு செய்தனர். கடந்த 21ம் தேதி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒபாமாவையும், அவரது மனைவி மைக்கேலி ஒபாமாவை சந்தித்து அறிமுகம் செய்து கொண்ட அவர் அவர்களுடன் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மூதாட்டிகளை கட்டித் தழுவி அரசியல் செய்வது எம்ஜிஆர் கால முதல் நம் நாட்டில் தொடர்கிறது. மேடையில் மூதாட்டிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் வழக்கம் பாஜ ஆட்சியில் வாஜ்பாய் முதல் மோடி வரை தொடர்கிறது. ஒபாமா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன…..
https://www.youtube.com/watch?v=s_YZx5dTg0Y
Patrikai.com official YouTube Channel