த்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் கத்ரா நகரில் வசித்து வந்த வாகித் அலி, தனது 105 வயதில் மரணம் அடைந்தார்.

இவர் பிரிட்டிஷ் இந்திய ராணவத்தின் பர்மா படைப்பிரிவில் சிப்பாயாக பணியாற்றியவர்
அப்போது நடந்த இரண்டாம் உலகப்போரில் வாகித் அலி, பங்கேற்றுள்ளார்.

இந்தியா சுதந்தரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தியா –பாகிஸ்தான் பிரிவினையின் போது வாகித் அலியின், அண்ணன் உள்ளிட்ட குடும்பத் தினர் அனைவரும் பாகிஸ்தான் சென்று விட, இவர் ,மட்டும் மூதாதையர் ஊரான கத்ராவிலேயே தங்கி விட்டார்.

பர்மாவில் ராணுவ வீரராக இருந்த சமயத்தில் இவர்,நேதாஜியை சந்தித்து பேசியுள்ளார்.
‘’ நேதாஜியை தன் குரு என வாகித் அலி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்’’ என வாகித் அலியின் மகன் ஷாகித் தெரிவித்தார்.

உலகப்போரில் ஈடுபட்டு, உயிருடன் இருந்த சிலரில் ஒருவரான வாகித் இறுதி சடங்குகள், போலீஸ் மரியாதையுடன் சொந்த ஊரான கத்ராவில் நேற்று நடைபெற்றது.

-பா.பாரதி.