பெங்களூரு:
ந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார்.

மார்ச் 1 முதல் இந்தியாவில் முதியோர்கள் மற்றும் இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு அப்போலோ மருத்துவமனையில் அந்நகரைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற முதியவர் தனது 77 வயது மகனுடன் வந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டார். இவர் தற்போது இந்தியாவிலேயே தடுப்பூசி பெற்ற வயதான பெண்மணி என்ற பெருமை பெற்றுள்ளார்.