ரிமேலி

பரிமலைக்கு தரிசனத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எரிமேலியில் பேட்டை துள்ளலில் கலந்துக் கொண்டுள்ளனர்.

Sample picture

இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ள சபரிமலை மகரவிளக்கு பூஜையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர்.  இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.   இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரண ஊர்வலம் கிளம்ப உள்ளது.

இந்த ஊர்வலம் 14 ஆம் தேதி அன்று மாலை சன்னிதானம் வர உள்ளது. இந்த திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.  அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும்.  பக்தர்கள் ஜோதியைத் தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எரிமேலியில் பேட்டை துள்ளுவது வழக்கமாகும்.  ஐயப்பன் மகிஷியை வதம் செய்ததை நினைவு கோரும் வகையில் உடல் எங்கும் வண்ணம் பூசியபடி பக்தர்கள் நடனமாடுவதே பேட்டைத் துள்ளல் ஆகும்.  நேற்று எரிமேலியில் பேட்டைத் துள்ளல் நடந்தது.

எரிமேலியில் நடந்த  பேட்டைத் துள்ளலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  பக்தர்கள் அவற்றைப் பின்பற்றி  பேட்டை துள்ளலில் கலந்து கொண்டுள்ளனர்.