jaya 2

சென்னை:

தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது” என்று பெருமிதப்பட்டார்.

அவர் பேசியதாவது:

“வரலாற்று சிறப்புமிக்க சென்னை, முதன் முதலாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகின்றது. 15 நாடுகளில் இருந்து ஆயிரம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தவிர இந்தியா முழுவதும் இருந்து 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே இந்த அரசின் நோக்கம்.

மற்ற மாநிலங்களை விட சேவைத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வளர்ச்சியில் தேசிய சராசரி யில் தமிழகம்  ஒன்றரை  மடங்கு கூடுதலாக உள்ளது.

வாகன உற்பத்தி துறையில் தேசிய மையமாக தமிழகம் விளங்குகிறது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

தமிழகத்தில் நிலவிய மின்சார பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. நாட்டிலேயே அதிக சூரிய ஒளி மின்உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
jayaசிறு-குறு தொழில்கள் தொடங்குவது அதிகரித்து வருகிறது. சிறு-குறு தொழில்களின் எண்ணிக்கை யில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து வசதி களையும் தமிழ்நாடு  கொண்டுள்ளது. தமிழ்நாடு அறிவுசார் மாநிலமாக விளங்குகிறது.
அசோசெம் ஆய்வில் தமிழ்நாடு சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முதலீடு செய்வோருக்கு வரிச் சலுகை மற்றும் ஊக்கமளிக்கப்படுகிறது.தொழில் தொடங்குவதற் கான அனுமதி 30 நாட்களுக்குள் வழங்கப்படும். புதிய தொழில் தொடங்குவதற்காக 42 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழ கத்தில் தயாராக இருக்கிறது.

இதுவரை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டி முதலீடுகள் வந்துள்ளன. நாளை இது மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபகரமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

சுற்றுலா பயணிகளை கவர்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சேவைத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அறிவுசார் துறையில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. கட்டிட கூரைகளில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே, தமிழகம் முதலிடம் வகிக் கிறது.

1992-ல் நான் வகுத்து தொழில் கொள்கையில் தற்போது பலன் ஏற்பட் டுள்ளது. 2023-ல் தமிழ் நாட்டில் தனி நபர் வருமானம் முன்னேறிய நாட்டு மக்களுக்கு இணையாக உயரும். எனவே தமிழ்நாட்டுடன் இணைந்து தொழில் தொடங்க வெளி நாட்டினருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்”

இவ்வாறு முதல்- அமைச் சர் ஜெயலலிதா பேசினார்.