டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு பணிக்காக 10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அதிஷி, கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய முதலவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்திய குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்ள் (Civil Defence Volunteers – CDV) துணை நிலை ஆளுநர் சக்சேனாவால் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட டெல்லி அரசு அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

நவம்பர் 11ம் தேதி முதல் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளதை அடுத்து இவர்கள் மாசு கட்டுப்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் CDVக்கள் பெண்கள் பாதுகாப்பிற்காக பஸ் மார்ஷல்களாக பேருந்துகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

CDVக்கள் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டுமே ஒழிய பஸ் மார்ஷல்களாக பயன்படுத்துவது தவறு என்று விமர்சித்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ள இவர்கள் மாசு கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.