பீஜிங்: 1000 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை ஒரே வாரத்தில் கட்டி முடிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த மருத்துவமனையாம்!
கொரோனா எனப்படும் ஒரு வைரஸ் சீனாவை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இன்னும் மருந்து கண்டறியப்படாத அதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் சரியான பலன் கிடைக்கவில்லை.
இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த வைரஸ், நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தவல்லது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு மருத்துவமனையை கட்டிமுடிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா போன்ற நாட்டால், இது சாத்தியம்தான்!