சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இனறு 1000 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்திற்கான வைப்பு நிதி மற்றும் கலைஞர் நுலகம் அடிக்கல் நாட்டுதல் உள்பட பல்வேறு நிகர்ச்சிகளில் பங்கேற்றார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,,, இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்களுக்கு ரூ.110 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கினார்.
மேலும், விரிவுபடுத்தப்பட்ட 1,000 ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களிடம் ஆணைகளை வழங்குகினார்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்,
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சியில் உலகத்தரத்துடன் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். Advertisements இதையும் படிக்க | தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனம்! சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 4.57 ஏக்கரில் 1,97,337 சதுரடி அளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமையவுள்ளது.