சென்னை:
ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; 100% வெற்றியுள்ள ஊரடங்காக அமைத்துள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் நேற்று 13 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது; விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள், கடைகள், மண்டபங்களை மூடும் நிலைக்கு அரசை தள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.