ஐதராபாத்:
ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் பல திறமைசாலிகள் இருந்தும் நோபல் பரிசு வாங்குவோரது எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. அதனால் ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்குவோருக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும். இளைய சமுதாயம் இதை சவாலாக எடுத்துக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். இதன் மூலம் நோபல் பரிசு பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
Patrikai.com official YouTube Channel