சென்னை: சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் எடையிலான ரூ. 50 லட்சம் ரூபாய் மதிபுள்ள  குட்கா புகையிலை பொருட்களை காவல்துறையினடர்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்கள் அரசு அதிகாரிகளின் ஆதரவோடு திருட்டுத்தனமாக விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சென்னை புறநகர்களில் பல குடோகன்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்த நிலையில்,  சென்னை புறநகர் பகுதியான சாத்தாங்காடு பகுதியில் உள்ள குடோன் ஒன்றுக்கு,  சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் நேற்று இரவு  சாத்தாங்காடு காவல் நிலைய போலீசார் மற்றும் வணிக வரித்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவினர், சிஎம்டிஏ ஸ்டீல் யார்டு பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்ற சரக்கு வாகனத்தை பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். அதனுள், குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மொத்த எடை, 10 ஆயிரத்து 150 கிலோ என்றும், அதன மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறிய காவல்துறையினர் அந்த வாகனத்தை  ஓட்டி வந்த வண்ணாரபேட்டையை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தன் என்பரை கைதுசெய்தனர்.