கமதாபாத்

டை செய்யப்பட பப்ஜி விளையாட்டை விளையாடியதாக பத்து குஜராத்தி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பப்ஜி எனப்படும் மொபைல் விளையாட்டை பல மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.   இந்த விளையாட்டு விளையாடுபவர்கள் மனத்தில் வன்முறையை தூண்டுவதாக பெற்றோர்களும் கல்வி ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.   பலரும் இதை வீட்டினுள் பிசாசு எனவே வர்ணித்து வருகின்றனர்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.     மற்ற மாநிலங்களிலும் இந்த விளையாட்டை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.   இலவசமாக தரவிறக்கம் செய்யக் கூடிய இந்த விளையாட்டு ஒரு தீவை பிடிக்க முயலும் வீரர்கள் ஒருவருக்கொருவர் மூர்க்கமாக சண்டை இட்டு கொலை செய்வதை அடிப்படையாக கொண்டதாகும்.

உலகெங்கும் சுமார் 10 கோடி பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.   இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் மாணவர்கள் பலர் தடையை மீறி இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்.   அவ்வாறு விளையாடியவர்களில் 10 பேரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட பத்து  பேரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.