டெல்லி: பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், மத்திய பிரதேச மாநிலத்தின் 28 தொகுதிக்கான இடைத்தேர்தல் உள்பட 10 மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலுடன், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் காலியாக இருந்த 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியும், மணிப்பூரில் காலியாக இருந்த 2 தொகுதிகளுக்கு நவம்பர் 7 ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல்களின் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்ற வருகிறது.
பீகாரில் நிதிஷ்குமாஷ் ஆட்சியை தக்க வைப்பாரா? அல்லது தேஜஸ்வி ஆட்சியை பிடிப்பாரா என்பது பிற்பகலில் தெரிய வரும்.
அதுபோல, மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு அளித்து பதவி விலகிய 28 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இந்த 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெறும் பட்சத்தில், அங்கு பாஜக ஆட்சிகவிழ்ந்து விடும் என்பது கறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.