மைசூரு

ரட்டை ரயில்பாதை திறப்பு விழாவில் மைசூரில் பேச இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில் /churumuri.blog என்ற வலைப்பூவில், “மைசூரில் மோடி பேசக்கூடாத பத்து விசயங்கள்” என்று குறிப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

அந்தக் கட்டுரை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த கட்டுரை:

 

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுக்கள் ஒரே மாதிரியாகவே உள்ளது.  உரத்த குரலில் பாஜக வின் சாதனைகளையும்,  அந்தந்த மண்ணில் பாஜக தற்போது செய்து வரும் தொண்டுகளைப் பற்றியும் குறிப்பிடுவது எல்லா இடங்களிலும் மாறாமல் உள்ளது.

இன்று மைசூரின் முறை

கர்னாடகாவில் தேர்தல் அட்டவணை இன்னும் வெளியாகாத போதிலும் மோடியின் பேச்சு பாஜகவின் பக்தர்களிடையே கடும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது.   அவர் அடுக்கு மொழியில் அர்த்தமே இல்லாமல் உரத்த குரலில் முழங்கும் அனைத்தையும் அவர்கள் கண்மூடித்தனமாக ரசித்து வ்ருகின்றனர்.   அது டீக்கடைக்காரர் என சொல்லிக் கொண்டாலும் சரி, தக்காளி வெங்காயம், உருளை விலைக் குறைப்பு என சொன்னாலும் சரி  ஒரே ரி -ஆக்‌ஷன் தான்.

அவருடைய இந்தப் பேச்சு டிவி சேனல்களுக்கும் வாட்ஸ் அப் பதிவாளர்களுக்கும் நல்ல தீனியைக் கொடுத்துள்ளது.

தற்போது குஜராத் ஸ்டைலில் அவர் மைசூரில் எது எதை பேசக் கூடாது என்பதற்கான 10 பாயிண்டுகள் இதோ

1.  ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்துவதைப் பற்றி பேச வேண்டாம் :  மைசூரில் நாட்டிலேயே அதிக நாட்களாக ஜனநாயகம் இருந்து வருகிறது.  சுமார் 136 வருடங்களுக்கு முன்பு அதாவர் 1881 லேயே மக்கள் ஆட்சி சபை இங்கு நிறுவப்பட்டு விட்டது.

2.  உள்ளாட்சி முறை பற்றி பேச வேண்டாம் : சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்குள்ள அரசர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி வருகின்றனர்.    தவிர சுமார் 120  ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அரசர்கள் உள்ளாட்சிக்கான பஞ்சாயத்து சபைகளை நிறுவி உள்ளனர்.

3.  அனைவரும் ஒன்றே என சமத்துவம் பேச வேண்டாம் :  சமுதாய ஒற்றுமையை இங்குள்ள அரசர்கள் பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.    கிருஷ்ண ராஜ சாகர் அணையை வடிவமைத்த விஸ்வேஸ்வரையா இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடிய போது அதை அரசர் மறுத்துள்ளார்.   அதற்காக விஸ்வேஸ்வரையா பணியில் இருந்து விலகியும் இட ஒதுக்கீட்டை அரசர் கை விடவில்லை.

4.  ஸ்மார்ட் சிடி பற்றி பேச வேண்டாம் :   தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்பே ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மைசூர் ஆசியாவிலேயே சுத்தமான நகரமாக உள்ளது.   அதனால் 1903 முதல் இது ஒரு ஸ்மார்ட் சிடி என நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

5.  நீர்வளம் குறித்து பேச வேண்டாம் :  கடந்த 1896 முதல் இங்கு குழாய்கள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.     மேலும் காவிரி ஆறு கரை புரண்டு ஓடுவதாலும்,  கிருஷ்ண ராஜ சாகர் அணை என்றுமே நிரம்பி வழிவதாலும் எங்களுக்கு நீர் மற்றும் மின்சாரத்துக்கு குறையே கிடையாது.

6.  ராக்கெட் தொழில் நுட்பம் பற்றி பேச வேண்டாம்.  :  மைசூரில் இருந்து 15 கிமீ தூரம் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தை ஆண்ட திப்பு சுல்தான் அந்தக் காலத்திலேயே தனது ராக்கெட் ஏவுகளை மூலம் நெப்போலியன் போனபார்ட் ராணுவத்தை விரட்டி அடித்துள்ளார்.

7.  கல்விமுறை, மற்றும் பகோடா பேச்சுக்கள் வேண்டாம் : இங்கு 1833 ஆம் வருடம் முதல் ஆங்கிலப் பள்ளி வந்து விட்டது.  முதல் பெண்கள் கல்லூரி 1881ல் வந்து விட்டது.   இது போல பல துறைகளிலும் மேம்பட்டு இங்கு வேலை இல்லா திண்டாட்டமே கிடையாது.

8.  யோகா பற்றி பேச வேண்டாம் :  உலகின் தலை சிறந்த யோகா மையம் என மைசூருக்கு ஏற்கனவே யுனெஸ்கோ நிறுவனம் பல தினங்களுக்கு முன்பே புகழாரம் சூட்டி விட்டது.  பல புகழ்பெற்ற யோகா ஆசிரியர்கள் இங்கு உள்ளனர்.

9.  விருந்தினரை வரவேற்போம் என பேச வேண்டாம்.  :  உலகின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த மைசூரில், மிருகக்காட்சி சாலை, பறவைகள் சரணாலயம், சாமுண்டி மலை,  என பல இடங்கள் உள்ளன.

10.   மைசூரை முன்னேற்றுவோம் என மைசூர் சில்க் , மைசூர் மசாலா தோசா, மைசூர் சந்தனம் என வாயை திறக்க வேண்டாம்.  இவை எல்லாம் ஏற்கனவே உலகுக்கு தெரிந்தவைகள் தான்