டில்லி

நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த 10 விவரங்கள் இதோ

இந்தியாவில் இதுவரை 1251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில் 202 பேர் உள்ளனர்.  இது மாநில அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாகும்.  அதைப் போல் டில்லியில் இதுவரை 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த மத நிகழ்வால் கொரோனா பாதிப்பு மிக அளவில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி வருகின்றன.  உல்கின் பல நாடுகளில் இருந்தும் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்வு குறித்த 10 விவரங்களை இங்கு காண்போம்.

1.     டில்லி நிஜாமுதின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த மசூதியில் இந்த மாதம் 1 முதல்15 ஆம் தேதி வரை நடந்த தப்லிகி ஜமாத் சபை நிகழ்வில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

2.     தபிலிகி ஜமாத் சபையைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.   இதில் 24 பேருக்குச் சோதனையில் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3.     இவர்களைத் தவிர இந்த நிகழ்வில்கலந்துக் கொண்ட 100 பேருக்கு நேற்று லோக் நாயக் மருத்துவமனையில் கொரோனா சோதனை நடந்துள்ளது.  இந்த முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

4.     இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் நேற்று ஐதராபாத் நகரில் மரணம் அடைந்தனர்  ஒருவர் ஸ்ரீநகரில் மரணம் அடைந்துள்ளார்

5.     இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள வந்த 2000 பேர் சபையின் ஆறு அடுக்கு விடுதியில் தங்கி உள்ளனர்.  அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சமைக்கப்பட்ட உணவை ஒரே இடத்தில் சாப்பிட்டுள்ளனர்.

6.     தெற்கு டில்லியில் உள்ள இந்த சபையின் கிளையை டில்லி காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல்துறை, மருத்துவ குழுவினர் ஆகியோர் நேற்று முன் தினம் சோதனை செய்து சீல் வைத்துள்ளனர்.

7.     இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டவ்ரக்ளில் பலர் பீகார், தெலுங்கானா, ஒரிசா, காஷ்மீர்,கர்நாடகா உள்ளிட்ட பலா மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். காஷ்மீரில் நடந்த முதல் கொரோனா மரணம் இந்த குழுவினரால் ஏற்பட்டுள்ளது.

8.     நிகழ்வு நடந்த மசூதி பங்க்ளேவாலி மசூதி என அழைக்கப்படும் ஆறு அடுக்கு கட்டிடமாகும்  இங்கு 2000 பேர் தங்கலாம்.  இது நிஜாமுதின் காவல் நிலையம், மற்றும் புகழ்பெற க்வாஜா நிஜாமுதின் அவுலியா ஆகியவற்றுக்கு  இடையில் அமைந்துள்ளது.   இந்த மசூதி உள்ள இடத்தில் சுமார் 25000 மக்கள் வசித்து வருகின்றனர்.

9.     மக்கள் ஊரடங்கு நடந்த மார்ச் 22 ஆம் தேதி அன்று டில்லி காவல் அதிகாரிகள்  இந்த மசூதியில் கூட்டம் கூடுவதைத் தடுத்துள்ளனர்.  அத்துடன் அன்றுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மசூதிக்குத் தொடர்ந்து வந்ததாகவும் அதற்குப் பிறகு யாரும் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

10.  நிஜாமுதினில் வசிக்கும் மக்கள் குறிப்பாக மசூதியில் இருந்த அனைவரையும் உலக சுகாதார மைய அதிகாரிகள் மற்றும் டில்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.  அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.