க்னோ

ட்டவிரோதமாக போலி ஆதார் அட்டைகளை தயாரித்த 10 பேர் உத்திரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள நிறுவனம் என அழைக்கப்படும் ஆதார் நிறுவனம் சில தனிப்பட்ட நபர்களால் சட்ட விரோதமாக போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப் படுவதாக புகார் அளித்திருந்தது.  இது குறித்து விசாரிக்க உ பி அரசு சிறப்பு போலீஸ் படை ஒன்றை அமைத்தது.  அந்த சிறப்புப் படையினர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்ததாக 10 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிறப்பு காவல் படையினர் தெரிவித்ததாவது :

“சட்ட விரோத ஆதார் அட்டைகள் தயாரிப்போர் குறித்து நாங்கள் புலனாய்வு செய்து வந்தோம்.  அதை ஒட்டி சவுரப் சிங், சதேந்திரகுமார், சுபம் சிங், சோபித் சசான், சிவம் குமார், மனோஜ் குமார், துளசிராம், குல்தீப்சிங், சமன் குப்தா, குட்டு கோந்த் ஆகிய பத்து பேரை கைது செய்துள்ளோம்.  இந்த கும்பலின் தலைவன் சவுரப் சிங்.  அவனுடைய வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த குற்றங்கள் நடந்துள்ளன.

இவர்கள் கைரேகை பதிவு சாதனம் மூலம் கைரேகைகளை முதலில் பதிவு செய்வார்கள்.  பிறகு அதை லேசர் பிரிண்டர் மூலம் ஒரு டிரேஸ் பேப்பரில் பிரிண்ட் எடுத்துக் கொள்வார்கள்.  பிறகு அதை போட்டோபாலிமர் ரெசின் உபயோகித்து ஆதார் இணையதளத்தில் பதிவார்கள்.   பிறகு அதைக் கொண்டு போலி ஆதார் அட்டைகளை உருவாக்கி விற்று விடுவார்கள்.   இதற்காக அவர்கள் ஒரு அட்டைக்கு ரூ.5000 பெற்றுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 11 மடிக்கணினிகள், 38 ரேகை பிரிண்ட் செய்த பேப்பர்கள், 12 செல்ஃபோன்கள், 2 ஆதார் கைரேகை பதியும் சாதனம் 2 கண் விழிகள் பதிவு செய்யும் சாதனம், 8 ரப்பர் ஸ்டாம்புகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இவர்களின் மேல் மோசடி, போர்ஜரி, ஆதார் சட்டம் 2016 ஆகியவைகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என கூறினார்கள்.

”போலியான அடையாள அட்டைகளை உபயோகப் படுத்துவதை கட்டுப்படுத்த உருவானது ஆதார் அட்டை என அரசு சொல்லி வருகிறது.  அனால் அந்த ஆதார் அட்டைகளே போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.