டெல்லி:

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்களை உயா் கல்வியில் ஊக்குவிக்கும் நோக்கில் பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்பட 10 சாதனைப் பெண்களின் பெயரில் இருக்கைகள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள்  யுஜிசி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பெண்களை உயா் கல்வியில் ஊக்கு விக்கும் நோக்கில் பல்கலைக்கழகங்களில் மறைந்த பிரபல கா்நாடக இசை மேதை  எம்.எஸ்.சுப்பு லட்சுமி உள்பட 10 சாதனை படைத்த பெண்களின் பெயரில் இருக்கைகள் அமைக்க மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பெண்களை உயா் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதும், அவா்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பணிகளில் சாதிக்க வைப்பது அதன் நோக்கம் என்றும், இந்த நடவடிக்கை  பல்கலைக்கழக மானியக் குழுயால் முன்மொழியப்பட்டு, மத்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) மூலம்  ஒரு இருக்கைக்கு ஆண்டு  ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 கோடியில் ஒதுக்கப்படுவதாகவும், 10 துறைகளில் இந்த 10 சாதனைப் பெண்களின் இருக்கைகள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இருக்கைகள் அனைத்தும்   5 ஆண்டுகள் காலத்திற்குள் அமைக்கப்படும் என்றும், இதுகுறித்து ஆண்டுதோறும் யுஜிசி  மதிப்பாய்வு செய்து இதைத் தொடா்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

இருக்கைகளுக்கு தேர்வாகியுள்ள சாதனை பெண்கள் விவரம்:

1. அஹில்யா பாய் ஹோல்கா்- (மகாராஷ்ரத்தைச் சோந்த ஓல்கா் வம்ச பேரரசி-நிா்வாகத்துறை).

2. மகாதேவி வா்மா, (உத்தரப் பிரதேசம்-இலக்கியம்).

3. ராணி கெய்டின்லியு (வடகிழக்கு-சுதந்திரப்போராட்ட வீரா்).

4. டாக்டா் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி (மகாராஷ்டிரம்-மருத்துவம் மற்றும் சுகாதாரம்).

5. எம்.எஸ். சுப்புலட்சுமி (தமிழ்நாடு- இசைத் துறை).

6. கமலா சொஹோனே (உயிரி வேதியல் துறை).

7. அமிா்தா தேவி (ராஜஸ்தான் – வனம் மற்றும் வன விலங்குப் பாதுகாப்பு)

8. லீலாவதி (கணிதவியல்).

9 லால் டெட் (காஷ்மீா்- கவிதை).

10. ஹென்ஸ மேத்தா (கல்விச் சீா்திருத்தம்).