சென்னை: நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும் சென்னையில் 10 அடி ஆழத்தில் மினி குளம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை முழுவதும்  47 இடங்களில்  “மினி” குளம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. முதல்கட்டமாக பெரம்பூர் மேம்பாலம் கீழே அமைக்கப்படுகிறது.

மழைக்காலத்தின் சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு கடுமையான அசவுகரிங்களை கொடுத்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மழைநீர் வடிகால் அமைத்தாலும், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், அந்த பணிகள் தான்தோன்றித்தனமாகவே உள்ளன. சென்னையின் உற்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள பல மழைநீர் வடிகால் பணிகள், மழைநீரை வெளியேற்றுவதற்கு பதிலாக கொசுக்களின் உற்பத்தி கலனாகவே செயல்பட்டு வருகின்றன. இதானால், தெருக்களில் மழைத்தண்ணீர் தேங்கி பொதுமகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தெருக்களில் மழை வெள்ளநீர் தேங்காமல் இருக்க 10 அடி ஆழத்தில் ‘மினி’ குளம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த மின குளத்தில், நீர் ஊறவைக்கும் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், அத்துடன், அதனுடன் மழைநீர் வடிகால்வாய் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  மேலும் சாலை மேற்பரப்பு ஓடையும் இதில் இணைக்கப்படுகிறது இந்த குளங்களைச் சுற்றி தோட்டங்கள், தேவையான விளக்குகள், பெஞ்சு இருக்கைகள் ஆகியவை செய்யப்படுகின்றன. இவை 47 இடங்களில் கடற்பாசி பூங்கா போல் அமைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த திட்டத்தின்படி, சென்னை மாநகர சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்னையைத் தீர்க்க 47 குளங்கள் ‘(ஸ்பாஞ்ச் பார்க்) அமைக்க பட உள்ளது. முதற்கட்டமாக 5 இடங்களில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று மேலும் 42 இடங்களில் அமைக்க இந்த மாதம் டெண்டர் விடப்பட உள்ளது. சாலைகள் மற்றும் மழை நீர்வடிகால்களில் இருந்து மழைத்தண்ணீர் இந்த குளங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதற்காக பூங்காக்களில் 10 அடி ஆழத்தில் மினி குளங்கள் மற்றும் அகழிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னை பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் பூங்கா தெற்கு பகுதியில் ரூ. 18 லட்சம் செலவில் இந்த குளம் அமைக்கப்படுகிறது. தொடர்ந்து, வி.ஜி.பி செல்வா நகர் 2-வது பிரதான சாலையில் ரூ.12 லட்சம் செலவிலும்கங்கை தெருவில் ரூ.8 லட்சம் செலவிலும் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகர தெருக்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மழைத்தண்ணீர் இந்த பூங்காவில் எளிதில் சேமிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் சென்னை நகரத்தில்  நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், கோடை காலத்தில் வறட்சி தடுக்கப்படும் என்றும் தெருக்களில் வெள்ளம் தேங்குவது தடுக்கப்படுவதுடன்,  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.