புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன நாட்டின் 10 மத்திய தொழிற்சங்கங்கள்.
ஆனால், இந்தப் பட்டியலில் ஆர்எஸ்எஸ் சார்பான பாரதீய மஸ்தூர் சங்கம் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள்:
* வருமானமற்ற அன‍ைத்து வரி செலுத்தும் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 அளித்தல்
* தேவையான அனைவருக்கும் மாதம் 10 கிலோ/1 நபருக்கு ரேஷன் பொருள் அளித்தல்
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், 200 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் மற்றும் கூலியை உயர்த்துதல்
* அனைத்து வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் விதிமுறைகளை திரும்பப் பெறுதல்
* பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்துதல்
* அரசு ஊழியர்களை முன்னதாகவே ஓய்வுபெறும் வகையில் நிர்ப்பந்திப்பதை கைவிடுதல்
* பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து, ஓய்வுபெறும் அனைவருக்கும் மீண்டும் பென்சன் வழங்குதல்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்கங்கள் தங்களின் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
https://wap.business-standard.com/article-amp/current-affairs/trade-unions-call-one-day-nationwide-strike-on-nov-26-over-labour-codes-120100200574_1.html?__twitter_impression=true&fbclid=IwAR3KudJ2T5leyLPz6saG59hz6kuhttMUaffbgUVPeNYF8g5gtLuw2tv4yns