பங்கர்மால், உத்திரப் பிரதேசம்
வடமாநிலங்களில் பனிப்பொழிவு மிகவும் கடுமையாக உள்ளது. உத்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள், டில்லி ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. கடும் குளிரும் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக தவித்து வருகின்றனர்.
பனிப்பொழிவினால் வாகன ஓட்டிகளால் எதையும் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். உத்திரப்பிரதேசத்தில் பங்கர்மால் என்னும் இடத்தில் உள்ள ஆக்ரா – லக்னோ நெடுஞ்சாலையில் 10 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து வாகனங்களும் கடும் சேதம் அடைந்துள்ளன.