சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளதாகவும், இது கடந்த 2023ம் ஆண்டை விட 1.41 கோடி பேர் அதிகம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு, 2023-ம் ஆண்டை விட ஒன்றரை கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும் பயணித்து உள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள்.
ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.