சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,039 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,039 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துற அறிவித்து உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,13,098 பேர் ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அதேவேளையில் 3,411 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,46,552 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,51,631 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,42,47,698 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 33,224 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 1,646 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தலைநகர் சென்னையில் நேற்று மேலும் 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத்யடுத்து, இதுவரை சென்னையில் 5,34,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இதன்மூலம், இதுவரை 8,252 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 5,24,659 பேர் குணம் அடைந்துள்ளனர்.
09.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 26,77,242 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன், 09.07.2021 அன்று 2,007 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: