டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதனால் 27ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி. இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக ஆட்டம் போட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் ஆத்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஸ் நீர்மாயிடம் தோல்வி அடைந்தார். அதே வேளையில், முதல்வர் அதிசி வெற்றி பெற்றுள்ளார்.
காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக 42 இடங்களிலும் ஆம்ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. ஆனால்,
மதியம் 1மணி நிலவரப்படி, பாஜக 48 இடங்களிலும் ஆம்ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 36 தொகுதிகளே தேவை என்ற நிலையில், பாஜக அறுதி பெரும்பான்மை பெறுவது உறுதியாகி உள்ளது. இதனால், அங்கு 27 ஆண்டுகளுக்குபிறகு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதையொட்டி, பாஜக தொண்டர்களும், தலைவர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி நிதியமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஸ் நீர்மாயிடம் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
டெல்லி முதல்வர் அதிஷி, கல்காஜி தொகுதியில் இருந்து பாஜகவின் ரமேஷ் பிதுரியை 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வீரேந்தர் சிங் 2029 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் புவன் தன்வாரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ராஜேந்திர நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் துர்கேஷ் பதக்கை தோற்கடித்து பாஜகவின் உமாங் பஜாஜ் வெற்றி பெற்றார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முணை போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு பிப்ரவரி 5ந்தேதி அன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்ததது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 762 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனர்.
சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்காக 13,750 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டிருந்தன. தேர்தல்ல் 1.47 கோடி போ் இன்று வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும், இவர்களில், ஆண்கள் – 81,05,236, பெண்கள்- 66,80,277, முதல் தலைமுறை – 2,32, 815, ராணுவத்தினா் – 11,608, மூன்றாம் பாலினித்தவா் – 869, மூத்த குடிமக்கள்- 2,04,830 (80 வயதுக்கு மேற்பட்டோா்) என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக 68 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பலத்த போட்டி நிலவியது. து. இத்தேர்தலில் 60.54% வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு வாக்குப் பதிவை ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். 50,42,988 ஆண் வாக்காளர்களும் 44,08,606 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். முஸ்தாபாத் பகுதியில்தான் மிக அதிகபட்சமாக 69.01% வாக்குகள் பதிவாகின. மெஹ்ரவுலி பகுதியில் குறைந்தபட்சமாக 53.02% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.